நியுயோர்க்கில் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மகப்பேறு மருத்துவ நிபுணர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.64 வயதுடைய குறித்தநபர் 1980 ஆண்டில் இருந்து கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியுயோர்க் பிராஸ்பைடிரியன் மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். அந்தக் காலகட்டங்களில் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் பலரை அவர் வன்புணர்வு செய்ததாக குற்றாச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கடந்த 2017ஆம் ஆண்டு பல பெண்கள், இவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறினர்.இப்புகாரை அடுத்து, அவர் மீது காவல்துறையினரால் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுமார் 245 பெண்கள் அவர் மீது புகார் அளித்துள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளாக நூற்றுக்கணக்ககான பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.