தெற்கு பாகிஸ்தானில் ரயில் ஒன்று தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனா் எனவும் காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்வும் தொிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இருந்து சுமார் 275 கிலோ மீற்றா் தொலைவில் உள்ள நவாப்ஷாவின் சஹாரா ரயில் நிலையம் அருகே ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டு கவிழ்ந்துள்ளன.
சம்பம் நடந்த போது ரயில் சாதாரண வேகத்தில் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்ததாகவும், தடம் புரண்டதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விபத்து குறித்து ரயில் சேவைகள் அமைச்சர் சாத் ரபீக் தெரிவித்துள்ளாா். இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
2021 ஆம் ஆண்டில், சிந்து மாகாணத்தில் இரண்டு ரயில்கள் மோதியதில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் என்பதுடன் பலா் படுகாயமடைந்திருந்தனா்.அத்துடன் 2013 மற்றும் 2019 க்கு இடையில் இதுபோன்ற விபத்துக்களில் 150 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.