புலமைப்பரிசில் பரீட்சையை கைவிடுவதற்கு வலியுறுத்து!
புலமைப்பரிசில் பரீட்சையை கைவிடுவதற்கு வலியுறுத்து!

ஆதவன்.


தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கைவிடப்பட வேண் டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் நடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இல்லா தொழிக்கப்பட வேண்டும். அபிவிருத்தியடைந்த நாடுகளில் தரம் 8 வரை தவணைப்பரீட்சை நடத்தப்படுவது இல்லை. ஆனால், இலங்கையில் தான் முதலாம் தரத்திலிருந்து பரீட்சைகளை நடத்தி மாணவர்களை நெருக்கடிக்கு
உள்ளாக்குகின்றனர். புலமைப்பரிசில் பரீட்சை என்ற பெயரில் மாணவர்களைத் துன்புறுத்துகின்றார்கள். பெற்றோர் இவ்வாறான துன்புறுத்தல்களையும் நெருக்கடிகளையும் செய்கின்றனர். இதனால் மாணவர்கள் கடுமையான உளப்பாதிப்புக்கு உட்படுகின்றனர் - என்றார். (ச)

106 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.