பொலிஸ்நிலையம் சென்றவர் மீது பொறுப்பதிகாரி தாக்குதல்;
பொலிஸ்நிலையம் சென்றவர் மீது பொறுப்பதிகாரி தாக்குதல்;

காயமடைந்த குடும்பதலைவர் மருத்துவமனையில் அனுமதி

(புதியவன்)

மன்னார் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்து நேற்று (02) காலை மன்னார் பொலிஸ் நிலையம் சென்ற இளம் குடும்பதலைவர் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ள நிலையில் குறித்த குடும்பதலைவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பதலைவர் கருத்து தெரிவித்தார்.

மன்னார் பள்ளிமுனை கிராமத்துக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை மன்னார் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸார் சென்று பிரிதொரு நபரின் பெயரை கூறி அவரை விசாரித்துள்ளனர்.

இதன் போது குறித்த வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் (வயது 42) என்ற குடும்பதலைவர் இருந்துள்ளார்.

இதன் போது அங்கு சென்ற பொலிஸார் வீட்டின் உரிமையாளரை கேட்ட போது அவர் இல்லை என தெரிவித்துள்ளனர்.உடனடியாக குறித்த குடும்பதலைவரின் இரு கையடக்கத் தொலைபேசிகளையும் பறித்ததோடு,அவருடைய உந்துருளியையும் எடுத்துக் கொண்டு மன்னார் பொலிஸ்நிலையம் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த குடும்பதலைவர் நேற்றைய தினம் (02) காலை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய சென்றுள்ளார்.

இதன் போது அங்குள்ள அதிகாரிகள் மன்னார் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு வருமாறு தெரிவித்தனர்.

இந்த நிலையில் குறித்த குடும்பதலைவர் மன்னார் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

இதன் போது மோட்டார் சைக்கிளின் ஆவணங்களை கேட்டுள்ளனர். அவரும் ஆவணங்களை பொலிஸாரிடம் வழங்கியுள்ளார்.

பின்னர் கையடக்க தொலைபேசிகள் மற்றும் உந்துருளியை கேட்டபோது மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூரிய ஆயுதம் ஒன்றினால் பல தடவைகள் தன்னை தாக்கியதாகவும் பொது மக்கள் மற்றும் ஏனைய பொலிஸார் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் தொடர்ந்தும் அவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதாகவும் குறித்த குடும்பதலைவர் தெரிவித்தார்.

"என்னிடம் எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை, என்னிடம் பறித்த பொருட்களையும் திரும்பத் தரவில்லை. மாறாக என்னை போக சொன்னார்கள். நான் எனது காயங்களின் பொருட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்" என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த  குடும்பதலைவர் மன்னார் பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அவரது மனைவி மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். (ஏ)

199 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.