மூவர் டக் அவுட்! மும்பை பரிதாபம்
மூவர் டக் அவுட்! மும்பை பரிதாபம்

புதியவன்

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 125 ஓட்டங்களை மட்டும் சேர்த்துள்ளது. இதில் 3 வீரர்கள் ஓட்டம் எதுவும் எடுக்காமல் முதல் பந்தில் ஆட்டமிழந்து (டக் அவுட்டாகி) வெளியேறினர்.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆர். ஆர்.  பந்து வீச்சை தேர்வு செய்தது.

 இதன்படி மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா - இஷான் கிஷன் களமிறங்கினர். 

ஆனால், சோகம் என்னவென்றால், டிரெண்ட் போல்ட் வீசிய 5 ஆவது பந்தில் ரோஹித் டக் அவுட் (முதல் பந்தில் ஆட்டமிழப்பு) . அதுக்கு அடுத்த பந்தே நமன் திர் ஆட்டமிழந்தார்.

 ஆக முதல் பந்துப்பரிமாற்றத்தில் (ஓவரில்) ஒரு ஓட்டத்துக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து மோசமான தொடக்கத்தை கொடுத்தது மும்பை.

இந்த சோகத்திலிருந்து மீள்வதற்குள் 3 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் டெவால்ட்பிரவிஸ் டக் அவுட். ஆக 3 பந்துப்பரிமாற்றங்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பு. ஆனால், ஓட்டங்கள் 16. அடுத்து 4 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் இஷான் கிஷன் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.

4 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 4 விக்கெட்டுக்கள் இழந்தது மும்மை அணி.  ஐ.பி.எல்லில் முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களில் மூன்று பேர் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட் ஆனது இது ஆறாவது முறையாகும்.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா - திலக் வர்மா ஓரளவுக்கு நம்பிக்கை கொடுத்தாலும், 10 ஆவது பந்துப்பரிமாற்றத்தில் 34 ஓட்டங்களில் ஹர்திக் விக்கெட்டை பறிகொடுத்தார். 10 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 77 ஓட்டங்கள மட்டுமே சேர்த்து தடுமாறிக்கொண்டிருந்தது மும்பை.

அடுத்து வந்த பியூஷ் சாவ்லா 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஓரளவுக்கு விளையாடி ஓட்டங்களைக் குவித்த திலக் வர்மா 32 ஓட்டங்களில் பிடி கொடுத்து வெளியேறினார். 15 பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை 102 ஓட்டங்களைச் சேர்த்திருந்தது.

அடுத்து ஜெரால்ட் கோட்ஸி 4 ஓட்டங்கள், டிம் டேவிட் 17 ஓட்டங்கள் என விக்கெட்டுக்கள் சரிய நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த மும்பை அணி 125 ஓட்டங்களைச் சேர்த்தது. பும்ரா 8 ஓட்டங்களுடனும், ஆகாஷ் மத்வால் 4 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.(க)

116 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.