வரலாற்றில் இன்று – 05.02.2024
வரலாற்றில் இன்று – 05.02.2024


[புதியவன்]

பெப்ரவரி 5 கிரிகோரியன் ஆண்டின் 36 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 329 (நெட்டாண்டுகளில் 330) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

    62 – இத்தாலியின் பொம்பெயி நகரில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
    756 – ஆன் லூசான் தாங் சீன அரசுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு, தன்னைப் பேரரசனாக அறிவித்தான்.
    789 – முதலாம் இதிரிசு மொரோக்கோவை அப்பாசியக் கலீபகத்தில் இருந்து பிரித்து, முதலாவது மொரோக்கோ நாட்டை உருவாக்கினார்.
    1597 – ஜப்பானின் ஆரம்பகால கிறித்தவர்கள் பலர் அந்நாட்டின் புதிய அரசால் சமூகத்திற்குக் கெடுதலாக இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
    1649 – முதலாம் சார்லசின் மகன் சார்லசு இசுடுவர்டை ஸ்கொட்லாந்து நாடாளுமன்றம் இரண்டாம் சார்லசு என்ற பெயரில் அந்நாட்டின் மன்னனாக நாட்டில் இல்லாத நிலையில் அங்கீகரித்தது.
    1778 – தென் கரொலைனா அமெரிக்க கூட்டமைப்பு அரசியலமைப்பை ஏற்றுக்கொண்ட இரண்டாவது மாநிலமானது.
    1782 – ஜப்பானியப் படைகள் பிரித்தானியப் படைகளைத் தோற்கடித்து மெனோர்க்கா தீவைக் கைப்பற்றின.
    1782 – அமெரிக்கா, ஒகைய்யோவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 90 அமெரிக்கப் பழங்குடிகள் வெள்ளை இனத்தவரால் படுகொலை செய்யப்பட்டனர்.
    1782 – நான்காவது ஆங்கிலோ- டச்சுப் போர்: பிரித்தானியர் கண்டிக்கு ஹியூ பொயிட் என்ற தமது தூதுவரைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பினர்.[1][2]
    1783 – இத்தாலியின் தெற்கே கலபிரியாவில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,000–50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
    1807 – பிரித்தானியாவின் பிளெனைம் சாவா ஆகிய கப்பல்கள் மொரிசியசஸ், ரொட்ரிகசஸ் தீவுக்கருகில் காணாமல் போயின.
    1818 – காருல் யோவான் சுவீடன், நோர்வே மன்னராக முடிசூடினார்.
    1852 – உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் புதிய ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
    1859 – மோல்டாவியா, வலாச்சியா இளவரசர் அலெக்சாந்துரு கூசா இரு பிராந்தியங்களையும் ஒன்றிணைத்து உதுமானியப் பேரரசின் கீழ் சுயாட்சி பெற்ற மாநிலமாக மாற்றினார். இது பின்னர் இன்றைய உருமேனியா நாடானது.[3]
    1869 – வரலாற்றில் மிகப் பெரும் வண்டல் தங்கம் அவுஸ்ரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
    1885 – பெல்ஜிய மன்னன் இரண்டாம் லியோபோல்ட் கொங்கோவைத் தனது தனிப்பட்ட பிரதேசமாக ஆக்கினான்.
    1900 – பனாமா கால்வாய் தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது.
    1909 – உலகின் முதலாவது செயற்கை நெகிழி பேக்கலைட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பெல்ஜிய வேதியியலாளர் லொயோ பேக்லண்டு அறிவித்தார்.
    1917 – மெக்சிக்கோவின் தற்போதைய கூட்டாட்சி அரசியலமைப்பு எற்றுக்கொள்ளப்பட்டது.
    1918 – ஐரோப்பாவுக்கு அமெரிக்கப் படைகளை ஏற்றிச் சென்ற துசுக்கானியா என்ற கப்பல் அயர்லாந்துக் கரையில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
    1918 – செருமனியின் வானூர்தி ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதுவே அமெரிக்காவின் முதலாவது வான்வழி வெற்றியாகும்.
    1922 – ரீடர்ஸ் டைஜஸ்ட் மாதிகை முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.
    1939 – இராணுவத் தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் 68-வது தலைவரானார்.
    1941 – இரண்டாம் உலகப் போர்: நேசநாட்டுப் படைகள் எரித்திரியாவின் கெரென் நகர் மீதான தாக்குதலை ஆரம்பித்தன.
    1958 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் சவான்னா கரைகளில் அமெரிக்க வான் படையின் ஐதரசன் குண்டு ஒன்று காணாமல் போனது. இதுவரையில் இது கண்டுபிடிக்கப்படவில்லை.
    1958 – ஐக்கிய அரபுக் குடியரசின் முதலாவது அரசுத்தலைவராக ஜமால் அப்துல் நாசிர் நியமிக்கப்பட்டார்.
    1960 – உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது.
    1962 – அல்சீரியாவுக்கு விடுதலை தரப்பட வேண்டும் என பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் கோரிக்கை விடுத்தார்.
    1971 – அப்பல்லோ 14 விண்கலத்தில் சென்ற அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கினர்.
    1975 – பெருவின் லிமா நகரில் காவல்துறையினர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டதை அடுத்து அங்கு கலவரம் மூண்டது.
    1985 – 2,131 ஆண்டுகளாக ரோம், கார்த்திஜ் நகரங்களுக்கிடையே இடம்பெற்றுவந்த போரை முடிவுக்கும் கொண்டுவரும் பொருட்டு இரு நகர முதல்வர்களுக்கும் இடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
    1994 – சாரயேவோவின் சந்தைப் பகுதி ஒன்றில் எறிகணை ஒன்று வெடித்ததில் 60 பேர் வரை உயிரிழந்தனர்.
    1997 – சுவிட்சர்லாந்தின் மூன்று முக்கிய வங்கிகள் பெரும் இனவழிப்பில் உயிர்தப்பியவர்களுக்காக $71 மில்லியன் நிதித் திட்டத்தை அறிவித்தன.
    2000 – செச்சினியாவின் குரோசுனி புறநகரில் உருசியப் படையினர் 60 பொது மக்களைக் கொன்றனர்.
    2004 – எயிட்டியில் புரட்சியாளர்கள் கோனாய்விசு நகரைக் கைப்பற்றினர்.
    2008 – தெற்கத்திய ஐக்கிய அமெரிக்காவில் சூறாவளி தாக்கியதில் 57 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

    1840 – ஜான் பாய்டு டன்லப், இசுக்கொட்டியத் தொழிலதிபர் (இ. 1921)
    1908 – இல்டன் சகோதரிகள், ஆங்கிலேய ஒட்டிப் பிறந்த இரட்டையர் (இ. 1969)
    1918 – வி. தர்மலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1985)
    1924 – துரைசாமி சைமன் லூர்துசாமி, இந்தியக் கத்தோலிக்கக் கருதினால் (இ. 2014)
    1933 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
    1934 – வெ. யோகேஸ்வரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1989)
    1943 – மைக்கேல் மண், அமெரிக்க இயக்குநர்
    1948 – டாம் வில்கின்சன், ஆங்கிலேய நடிகர்
    1976 – அபிஷேக் பச்சன், இந்திய நடிகர்
    1985 – கிறிஸ்டியானோ ரொனால்டோ, போர்த்துக்கீசக் கால்பந்து வீரர்
    1992 – நெய்மார், பிரேசில் காற்பந்து வீரர்

இறப்புகள்

    1597 – கொன்சாலோ கார்சியா, இந்திய உரோமன் கத்தோலிக்கப் புனிதர் (பி. 1556)
    1898 – மு. கா. சித்திலெப்பை, இலங்கைத் தமிழறிஞர் (பி. 1838)
    1993 – ஜோசப் எல் மேங்கியூவிஸ், அமெரிக்க இயக்குநர் (பி. 1909)
    2000 – டி. ஜி. லிங்கப்பா, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1927))
    2008 – மகேஷ் யோகி, இந்திய ஆன்மிக குரு (பி. 1918)
    2012 – தி. சு. சதாசிவம், தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் (பி. 1938)
    2015 – கே. என். சொக்சி, இலங்கை அரசியல்வாதி (பி. 1933)

சிறப்பு நாள்

    காசுமீர் ஒருமைப்பாடு நாள் (பாக்கித்தான்)
    விடுதலை நாள் (சான் மரீனோ)
    ஒற்றுமை நாள் (புருண்டி) [எ]

368 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.