வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பல மக்களிடம் பணம் கொள்ளையடித்த ஜே.கே. எனும் ஆட்கடத்தல் காரர் ஒருவர் போலியான கடவுச்சீட்டுடன் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார் கட்டுப்பகுதியில் உள்ள பாரிய பண்ணை ஒன்றின் உரிமையாளர் ஆவார்.
வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி குறித்த பிரதேசத்தில் 10 இற்கும் மேற்பட்டவர்களிடம் சராசரி பத்து இலட்சம் ரூபா பணத்தினை பெற்றுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் பணத்தினை கொடுத்தவர்கள் ஏமாந்து போய் உள்ளனர்.
இவரின் முகவரிகள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, பதுளை, கொழும்பு போன்ற முகவரிகளில் தங்கியுள்ளதாக பதிவுகள் காணப்படுகின்றது.
வெளிநாட்டிற்கு குறிப்பாக கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு குழுவாக ஆட்களை சேர்த்து அவர்களிடம் இருந்து முதற்கட்டம் ஒருதொகை பணத்தினை பெற்றுக்கொண்ட பின்னர் தனக்கு விசுவாசமான ஒருவரை மத்திய மலைநாட்டுஅழைத்துச் சென்று அவரை போட்டோ எடுத்து கனடாவில் இறங்கிவிட்தைப்போல் கனடா நாட்டின் புகைப்படங்களை இணைத்து கிராபிக் செய்து அதனை தனது முகநூலில் பதிவு செய்து மற்றவர்களை நம்பவைத்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இவ்வாறு ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு தொலைபேசி இலக்கங்களை கொடுத்து பணத்தினை வாங்கிப் பின்னர் தொலைபேசி அழைப்பினை துண்டித்துள்ளார்.
குறித்த நபரிடன் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போதும் அவரை இதுவரை கைது செய்யவில்லை.
இந்த நிலையில் தலைமறைவான நிலையில் இருந்த குறித்த ஆட்கடத்தல்காரர் கடந்த மாத முடிவில் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக வெளிநாட்டிற்கு பயணிக்க முயற்சி செய்தவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வழக்குகள் யாழ்.மல்லாகம் நீதிமன்றில் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 7ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டர். 21ஆம் திகதி(இன்று) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.