திருத்தப்பட்டது நுரைச்சோலை!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று மாலை சுமார் 260 மெகா வோட்ஸ் மின்சாரம் தேசிய மின்வலயத்துடன் இணைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை…

கிளாலியில் மிதிவெடியில் சிக்கி பரீட்சை எழுதவிருந்த மாணவியின் கால் துண்டிப்பு!

எழுதுமட்டுவாழ் , கிளாலி பகுதியில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு இன்று தோற்றவிருந்த 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் மிதிவெடியில் சிக்கியதில் அவரின் கால் துண்டாடப்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள தும்புத்தொழிற்சாலைக்குரிய…

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வீடு எரிப்பு!

அநுராதபுரம், இபலோகம பகுதியில் அமைந்துள்ள லங்கா ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் வீடு நேற்றுமுன்தினம் இரவு விஷமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அவரது எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளைப் பெற்றுக்…

இலங்கை மக்களுக்காக தமிழகத்தில் மொய் விருந்து நடத்தி நிவாரண நிதி சேகரிப்பு!

இலங்கைக்கு நிவாரணம் வழங்குவதற்காக தமிழகத்தின் புதுக்கோட்டை அருகே உள்ள தேநீர்க் கடையொன்றில் மொய் விருந்து நடத்தி நிதி சேகரிக்கும் செயற்பாடு நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. புதுக்கோட்டை – மேட்டுப்பட்டியில் உள்ள தேநீர்க்…

தமிழக மக்களின் உதவி இருட்டடிப்பு!

தமிழக அரசின் நிதியில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும் உதவிப் பொருள்கள் என்பதை மறைத்து இந்திய மக்களின் உதவி என்று எழுதப்பட்டு, இலங்கை அரசிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியத் தூதரகம் விடுத்த…

பொருளாதார நெருக்கடி தீர புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்!

நாட்டின் தற்போதைய பொருளாதார குறிப்பாக உணவு நெருக்கடியைப் போக்குவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் உதவிகளையும் நாம் எதிர்பார்க்கின்றோம் - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்புச் செய்தியாளர் ஒருவருக்கு…

எரிபொருள் வழங்கல் முன்னுரிமையால் முரண்பாடு;ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரீட்சைக் கடமைக்குச் செல்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பெற்றோல் வழங்கியமையால் பொதுமக்கள் முரண்பட்ட சம்பவங்கள் நேற்றுப் பதிவாகியுள்ளன. அதேவேளை பலாலி…

இனப்பிரச்சினையைத் தீர்த்திருந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிராது!

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோத்தாபய பதவி விலகவேண்டும்…

மேலும் புதிய 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (23) ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். முன்னதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு மேலதிகமாக இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.…

செயலிழந்தது அவசர காலச்சட்டம்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த 6ஆம் திகதி நடைமுறைப்படுத்திய அவசரகாலச் சட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் செயலிழந்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு அவசரகாலச்…