செய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்

வட்டுக்கோட்டையில் பெண் ஒருவரை காணவில்லை!

யாழ்ப்பாணம் – வட்டுக்காேட்டை ஞானசம்பந்தர் வீதி சங்கரத்தை வட்டுக்கோட்டையை சேர்ந்த மகேந்திரன் யசோதா என்பவரை 11.11.2019 தொடக்கம் காணவில்லை.

இவர் தபாலகத்திற்கும் சமுர்த்தி அலுவலகத்திற்கும் செல்வதாகவும் வரும்போது வயது முதிர்ந்த தனது தாயாருக்கு மருந்து வாங்கி வருவதாக கூறி காலை 9.30 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

தபால் நிலையத்திற்கு அருகில் இருந்த CCTV பதிவுகளை பார்த்தபோது தபால் நிலைய வாயில் வரை வந்தவர் அலுவலகத்திற்குள் செல்லாது திரும்பியதும் கண்டறியப்பட்டுள்ளது.

“அவர், சில சந்தர்ப்பங்களில் மன உளைச்சலான நிலையில் காணப்படுவார் என்றும். சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது” எனவும் அவரது சகோதரர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

சென்னையிலும் எழுக தமிழ்!

G. Pragas

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்; ரணில் தீர்மானம்

G. Pragas

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம்!

G. Pragas

Leave a Comment