செய்திகள்தலையங்கம்

தீர்மானங்களை அடுக்குவதால் எதுவும் நிகழப்போவதில்லை

தீர்மானங்களை அடுக்குவதால் எதுவும் நிகழப்போவதில்லை -விமல் எக்­கா­ளம்

என்­ன­தான் தீர்­மா­னங்­களை இலங்கை மீது ஐ.நா. அடுக்க­டுக்­காக நிறை­வேற்­றி­னா­லும் இங்கு எது­வும் நடக்­கப்­போ­வ­தில்லை. இதைச் சம்­பந்­த­னும், அவர் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும் இவ்­வாறு முன்­னாள் அமைச்­ச­ரும் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ஸ தெரி­வித்­தார்.

நாட்­டைத் துண்­டாக்க முய­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் எந்­தக் கருத்­துக்­க­ளுக்­கும் அரசு செவி­சாய்­யக்­கூ­டாது என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

மனித உரிமை மீறல்­கள், போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளி­லி­ருந்து இலங்கை அர­சும், அதன் படை­க­ளும் தப்­பிக்க முடி­யா­த­வாறு மிக­வும் இறுக்­க­மான தீர்­மா­னம் ஜெனி­வா­வில் நிறை­வேற்­றப்­பட வேண்­டும் என­வும், அதற்கு ஐக்­கிய நாடு­க­ளின் மனித உரி­மை­கள் பேர­வை­யின் உறுப்பு நாடு­கள் முழு­மை­யான ஆத­ரவை வழங்க வேண்­டும் என­வும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் கோரி­யி­ருந்­தார்.

இதற்­குப் பதி­ல­ளிக்­கும் வகை­யி­லேயே விமல் வீர­வன்ஸ மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­விக்­கை­யில்,

‘ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யில் இலங்கை மீது தீர்­மா­னங்­கள் அடுக்­க­டுக்­காக நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பே பிர­தான கார­ணம். இது அனை­வ­ருக்­கும் தெரிந்த விட­யம். கடந்த நல்­லாட்சி (மைத்­திரி=ரணில்) அர­சாங்­கத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரின் கை மேலோங்கி இருந்­த­மை­யால் இலங்கை மீதான அன்­றைய ஐ.நா. தீர்­மா­னத்­துக்கு நல்­லாட்சி அர­சாங்­கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தமை மாபெ­ரும் தவ­றா­கும்’ -என்­றார்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282