வெலிச்சோர் ஜோசப்
(முன்னாள் லிகிதர்- புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்)
தோற்றம்
27.08.1942
மறைவு
02.01.2025
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும் இராஜேந்திரா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வெலிச்சோர் ஜோசப் நேற்று (02.01.2025) வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்-நேசம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான இராசையா-மர்த்தீனம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற தங்கராணியின் அன்புக் கணவரும், ஜொணி சசிதரன் (ஆசிரியர்-உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்), கிளனி வசிதரன் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் கதிரொளி (ஆசிரியை- கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம்), கவிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜொய்டன், சைடன், கெய்டன், வெயினன், கெயினன் ஆகியோரின் பாசமிகு பேரனும், லீலா, காலஞ்சென்ற மலக்கியாஸ், சாண்டோ (ஜேர்மனி), பாமா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், போதகர் ஜெயசீலன், ஜெயராணி, காலஞ்சென்ற புஸ்பராணி, பத்மராணி, எஸ்தர்ராணி, இந்திராணி (ஜேர்மனி), அரியசீலன் (கொலண்ட்), அமிர்தராணி, காலஞ்சென்ற முடியப்பு மற்றும் யசிந்தா, ஜெயவதி (ஜேர்மனி), தெய்வேந்திரம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் பூதவுடல் இன்று (03.01.2025) வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் யாழ் பேராலயத்திற்கு திருப்பலிக்காக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
34, இராஜேந்திரா வீதி,
யாழ்ப்பாணம்.
இறுதிக்கிரியைகள் 03-01-2025 அன்று 03:00 PM மணியளவில் யாழ்ப்பாணம் இல் அமைந்துள்ள புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.