கெங்காதேவி ஆனந்தகுமாரசுவாமி
(காரிகாசிவதேவி)
தோற்றம்
18.07.1935
மறைவு
28.12.2024
இளவாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கெங்காதேவி ஆனந்தகுமாரசுவாமி கடந்த 28.12.2024 சனிக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பு (மலேயன் Pensioner) - சரஸ்வதி தம்பதியரின் மகளும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் B.A (ஓய்வுநிலை அதிபர், திருநெல்வேலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை) - பூதாத்தைப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற ஆனந்தகுமாரசாமி B.A (ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும், சிவானந்தன் (சிவாஜி) (Accountant, London) இன் பாசமிகு தாயாரும், ஜனனியின் (Customer Service Adviser) பாசமிகு மாமியாரும், பவன் (Management Accountant, London) இன் பாசமிகு அப்பம்மாவும், காலஞ்சென்றவர்களான சரோஜினிதேவி கிருபாகரன், Dr.கணேசலிங்கம் (R.M.O), மற்றும் குமாரலிங்கம் (J.P, Retd E.S, C.E.B) ஆகியோரின் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி சிவராஜா, இராஜஇராஜேஸ்வரி விசுவநாத முதலியார் (அவுஸ்ரேலியா), பரமேஸ்வரி சச்சிதானந்தம், ஸ்ரீபாஸ்கரன்B.A (முன்னாள் தவிசாளர் பிரதேச சபை. KKS)), கலாநிதி சுசீந்திரராசா PhD (வாழ்நாள் பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகம்), Dr. . மகேந்திரன் (E.N.T Surgeon), பாலேந்திரா (Provincial Director R.D.A) மற்றும் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் புவனேஸ்வரி சண்முகலிங்கம் B.A (ஓய்வுநிலை ஆசிரியை), ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.01.2025) ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
இளவாலை, வடக்கு.
இறுதிக்கிரியைகள் 05-01-2025 அன்று 09:00 AM மணியளவில் கீரிமலை இல் அமைந்துள்ள கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.