ஆத்திசூடி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், தாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கமலராசா அவர்கள் கடந்த (02.01.2025) வியாழக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - லட்சுமி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை மற்றும் - மீனாட்சி தம்பதியரின் அன்பு மருமகனும், தங்கேஸ்வரி (ராசா) அவர்களின் அன்புக் கணவரும், சர்மிளா (பிரன்ஸ்), சிறீதரன், பர்மிளா (பிரன்ஸ்), சுதன், கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான சிவஞானம், நாகராசா, பரமராசா மற்றும் யோகநாதன் (கனடா), மனோகரன் (பிரான்ஸ்), தகமணி (கனடா), லீலாவதி (டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், தங்கராசா, இராயேஸ்வரி, நாகராசா (பிரன்ஸ்) ஆகியோரின் மைத்துனரும், சிவகுமார் (பிரான்ஸ்), சிவம் (பிரான்ஸ்), றாஜினி, மயூரி, கஜந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், சஞ்ஞை, சஜித், சஜின், சியா, பினுசியன், பிறின்சியன், திசான், திசானி, நிக்கி, சர்மி, சயந்திகா, தனுசியன், டினுசியன், வினோத் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (05.01.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்
077 361 6134
சோம றோட்,
தாவடி தெற்கு, தாவடி.
இறுதிக்கிரியைகள் 05-01-2025 அன்று 11:00 AM மணியளவில் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.