மாதம் ஒன்றினைக் கடந்த எம் செல்வமே
எம்மை நாமே ஆற்றுப்படுத்த முடியாமல்
புலம்பித் தவிக்கின்றோம் உன் நினைவில்
ஆறாத துயரத்தை எமக்களித்துவிட்டு
ஆகுதியாகி நீ சென்றுவிட்டாயே சுஜீனா!
எமது குடும்பத்திற்கு ஒளிவிளக்காய் வந்துதித்த
தெய்வ மகளே சுஜீனா!
விந்தைகள் பல புரிந்து எம்மை வியக்கவைத்து - நீ
விண்ணுலகம் சென்றதேனோ?
உன்முகம் பாராமல் உன்மொழி கேளாமல்
உள்ளக் குமுறலை அடக்க முடியவில்லையே
மாதமொன்று கடந்தாலும் எமது இப் பிறப்புள்ளவரை
கண்ணீர்;த் துளிகளின் மணிகளினால் உன்னை அர்ச்சித்து
உனது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்;த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
குடும்பத்தினர்.
செல்வநகர், நாவற்குழி வடக்கு, கைதடி.