நீர்வேலி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவகுமார் கடந்த 06.01.2025 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - மகேஸ்வரி தம்பதியரின் நான்காவது புதல்வனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை (சின்னத்தம்பி) - பாக்கியம் தம்பதியரின் மருமகனும், சோதிமலரின் (குஞ்சு) அன்புக் கணவரும், வினோத்குமாரின் (பிரான்ஸ்) அன்புத் தந்தையும், லக்ஷிகா (பிரான்ஸ்) இன் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற அரசகுமார் (சுவிஸ்) மற்றும் பத்மகுமார் (கொழும்பு), காலஞ்சென்ற நந்தகுமார் (பிரான்ஸ்) மற்றும் சாந்தினி (கனடா), விசியகுமார் (டென்மார்க்), சந்திரகுமார் (நீர்வேலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற வரதராசா (சுவிஸ்) மற்றும் ருக்குமணிதேவி, குமுதினி, கமலினி (சுவிஸ்), காலஞ்சென்ற கமலாம்பிகை மற்றும் ராஜினி (பிரான்ஸ்), பரமேஸ்வரன் (கனடா), சாமினி (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரதி (சுவிஸ்), இராஜசிவம் (சுவிஸ்), சண்முகதாஸ் (சுவிஸ்) ஆகியோரின் சகலனும், காலஞ் சென்ற அப்பாத்துரை (கிராமசபைத் தலைவர்)-சொர்ணம்மா தம்பதியரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12.01.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்;, நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
இராஜவீதி, நீர்வேலி வடக்கு.
இறுதிக்கிரியைகள் 12-01-2025 அன்று 08:00 AM மணியளவில் நீர்வேலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.