(ஓய்வுபெற்ற ஆசிரியை, யாழ், கனகரத்தினம் ம.ம.வித்தி, வவுனியா தமிழ் மகாவித்தியாலயம், யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம் வித்தியாலயம்)
திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி சந்திரசேகரம்பிள்ளை சிவானந்தவல்லி அவர்கள் நேற்று (18.01.2025) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம்பிள்ளை - அன்னலட்சுமி தம்பதியரின் கனிஷ்ட மகளும், Dr.நீலாயதாட்சி, காலஞ்சென்ற செல்வி பராபரை காயாரோகணன் (ஓய்வு பெற்ற தொழில்நுட்பவியலாளர், யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் சகோதரியும், பாலச்சந்திரன் (ஓய்வுபெற்ற மாவட்ட மருந்தாளர்), நபோநிதி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் மைத்துனியும், Dr..அரவிந்தன் (யாழ் போதனா வைத்தியசாலை), சுதர்சன் (Australia), சிவதர்சன் (UK), லவலோஜன் (பொறியியலாளர்) ஆகியோரின் சிறியதாயும், Dr..சௌமி (யாழ் போதனா வைத்தியசாலை), Dr..சௌஜா (யாழ் போதனா வைத்தியசாலை), கஜானன் (பொறியியலாளர்), சௌஜந்தி (விவசாய முகாமைத்துவ மாணவி) ஆகியோரின் அத்தையும், Dr..லோஜிதா, கலைவதனி (UK), சுதர்சினி (Australia) ஆகியோரின் மாமியும், ஆருக் ஷி , ஆஹர்ஷி, சுவாஸ்தி, சாருஜன், ஷாஷ்வி, ஆத்மி, அகிஷா, தளிர்விழி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமச்சடங்குகள் நாளை (20.01.2025) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
Dr.பா.அரவிந்தன்
228 / 2 சேர் பொன் இராமநாதன் வீதி,
திருநெல்வேலி.
இறுதிக்கிரியைகள் 20-01-2025 அன்று 11:00 AM மணியளவில் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.