நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி)
தோற்றம்
06.04.1929
மறைவு
19.01.2025
சுதுமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா ஜீவகாந்தி (மனோன்மணி) அவர்கள் நேற்று முன்தினம் (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான C.M. பொன்னையா - சௌபாக்கியவதி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சரஸ்வதி தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற V.P. நடராசா (இளைப்பாறிய இலங்கை வங்கி காசாளர்) அவர்களின் மனைவியும், கலாநிதி, தயாநிதி (லண்டன்), சத்தியவதனி, சுசிரேகா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ராஜ்குமார், பரதராஜன், காலஞ்சென்றவர்களான கதிரவேலுப்பிள்ளை , சிவகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியும், தாரணி - மயூரன், அரவிந்தன், சுவர்ணா, கீர்த்தனா, கோசலா, மோகன்தாஸ், ஜலந்தரி - சதீஸ், கல்பனா, தினேஸ் - விதுரா, அனிந்திகை - சன்சயன், ரமேஸ், துர்க்கா - றமணன், சிவனங்கை ஆகியோரின் பேர்த்தியும், அனீசா, மகீழன் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்றவர்களான இராமநாதன், பத்மநாதன், புவனசிங்கம், நேசராஜன், பூமணி, லீலாவதி, பராசக்தி ஆகியோரின் சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (22.01.2025) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.
இறுதிக்கிரியைகள் 22-01-2025 அன்று 11:00 AM மணியளவில் தாவடி இல் அமைந்துள்ள தாவடி இந்து மயானம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.