அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் (றஞ்சி)
(இளைப்பாறிய St.ஜேம்ஸ் மகளிர் பாடசாலை ஆசிரியை)
தோற்றம்
13.06.1943
மறைவு
23.01.2025
35A, ஓடக்கரை வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனியாப்பிள்ளை கிறேஸ் வின்சன்ற் அவர்கள் கடந்த 23.01.2025 வியாழக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை - றோசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சன்ஜோன் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மனவல் வின்சன்ற் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான மத்தீனா, மத்தியாஸ், விக்ரோறியா, மரியநாயகம், வேதநாயகம், அருமைநாயகம், மேரி பெனிக்னா மற்றும் றெஜினா (லில்லி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை, அலோசியஸ், பாக்கியம், டோமினிக், குணம் மற்றும் மகேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (28.01.2025) செவ்வாய்க்கிழமை பி.ப 02.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு பிற்பகல் 3.00 மணியளவில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் https://youtube.com/live/gyqGIAqo_cM? feature=share என்னும் Link இல் பார்வையிடலாம்.
தகவல் : குடும்பத்தினர்
றமேஷ் (பெறாமகன்) - 076 739 1019
சுரேஷ் (பெறாமகன்) - 074 064 0124
35A ஓடக்கரை வீதி,
யாழ்ப்பாணம்.
இறுதிக்கிரியைகள் 28-01-2025 அன்று 03:00 PM மணியளவில் புனித மரியன்னை சேமக்காலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.