கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், செம்மணி வீதி, நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு கந்தையா இராஜேந்திர ராவ் அவர்கள் நேற்று (01.02.2025) சனிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - சீதாலட்சுமி தம்பதியரின் ஏக புத்திரனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் - இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மருமகனும், காலஞ்சென்ற விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜனந்தன், ஜயானந்தி, (மக்கள் வங்கி - சுன்னாகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், மோசெஸ் பத்மலால் (சுகாதார அமைச்சு - வடக்கு மாகாணம்), துஷானி (மாகாண சுகாதாரத் திணைக்களம் - வடக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தர்ணிகா, லிதுர்ஷிகன், ருத்விக், லக் ஷிவ் ஆகியோரின் பேரனும், சுசீலாதேவி, வத்சலா (ஜேர்மனி), கௌசலா (சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சந்திராதேவி, இந்திராதேவி, தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான நவரட்ணம், துரைசிங்கம், இராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.02.2025) திங்கட்கிழமை அவரின் இல்லத்தில் நடைபெற்று மு.ப 10.30 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்
077 715 6106 / 077 221 0365
இல 23/01 வெயிலுகந்த பிள்ளையார்
கோவில் ஒழுங்கை,
செம்மணி வீதி, நல்லூர்.
இறுதிக்கிரியைகள் 03-02-2025 அன்று 10:30 AM மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.