ரவிசாந்தினி மகேந்திரன
தோற்றம்
31.07.1950
மறைவு
12.02.2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும் சுதுமலைச் சந்தி மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட ரவிசாந்தினி மகேந்திரன் நேற்றுமுன்தினம் (12.02.2025) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி - பரமேஸ்வரி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் - சகுந்தலையம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற மகேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், நித்தியநந்தினி, கலாவதி, ரவீந்திரன், சுரேந்திரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், தபோதினி, தர்சினி, லம்போதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், கஜரூபன் விநாயகன். சிவஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், தனஞ்செயன், அம்ரிதா, சஞ்சயன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
021 225 5621
சுதுமலைச் சந்தி,
மானிப்பாய்.