16ஆம் நாள் நினைவஞ்சலியும் சபிண்டீகரணஅழைப்பும் நன்றிநவிலலும்
கடந்த 28.01.2025 செவ்வாய்க்கிழமை இறைபதமடைந்த
எமது குடும்பத்தலைவர்
அமரர் Dr.கந்தையா சபாரட்ணம்
தோற்றம்
12.12.1933
மறைவு
28.01.2025
அவர்களின் மறைவுச் செய்திகேட்டு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து தொலைபேசி, வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உறவுகளுக்கும், மலர்வளையங்கள், கண்ணீர் அஞ்சலிப் பிரசுரங்கள் மற்றும் பதாகைகள் வெளியிட்ட நல் உள்ளங்களுக்கும், அன்னாரின் இறுதிக்கிரியைகளில் நேரடியாக கலந்துகொண்ட சகல அன்பர்களுக்கும் எமது துன்பத்தில் பங்குகொண்ட அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த எமது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் இன்று (14.02.2025) வெள்ளிக்கிழமை நல்லூர் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் (சட்டநாதர் கோவில் அருகாமையில்) நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் தாங்கள் தங்கள் குடும்ப சகிதத்தோடு வருகை தந்து கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் அழைப்பினை தனிப்பட்ட அழைப்பாகவும் ஏற்றுக்கொள்ளவும்.
குடும்பத்தினர்
98, சட்டநாதார் வீதி, நல்லூர்.