பார்வதி சுப்பிரமணியம்
தோற்றம்
05.01.1937
மறைவு
02.03.2025
கரவெட்டி புதுத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சாவகச்சேரி கண்டி வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பார்வதி சுப்பிரமணியம் கடந்த 02.03.2025 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் கரவெட்டி புதுத்தோட்டத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர் களான கந்தப்பு வாத்தியார்- இலட்சுமி தம்பதியரின் பாசமிகு மகளும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - முத்தாச்;சி தம்பதியரின் பாசமிகு மருமகளும், சாவகச்சேரி, தபால் கந்தோர் வீதியை சேர்ந்த Dr. மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும், வித்தியானந்தன் (USA), அருள்நிதி (Australia), தயாநிதி (Canada) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற வர்களான வீரவாகு, விக்கினேஸ்வரன், பாலசுப்பிரமணியம், கணேசன், சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், சாந்தி (USA), பராபரன் (Australia), செல்வகுமரன் (Canada) ஆகியோரின் அன்பு மாமியாரும், ரகுபரன், அக் ஷாரா, அருணன், அபிநயா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (09.03.2025) ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணியளவில் கண்டி வீதி, சாவகச்சேரி அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்;. இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
கண்டி வீதி,
சாவகச்சேரி,
(வாகன புகை பரிசோதனை
நிலையத்திற்கு முன்பாக)