இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஞானசூரியர் சிவக்குமரன்
(முன்னாள் வடமாகாண விளையாட்டுத்துறை திணைக்கள
அமைய அலுவலர்)
மண்ணில்
22.02.1982
விண்ணில்
02.03.2023
திதி- பூர்வபக்க ஏகாதசி (10.03.2025)
நினைவுநாள்-02.03.2025
நினைவுகள் சுமந்துவர
நிழலாக நீ தொடர(க்)
கனலாகும் எம் இதயம்
கதறியழப் பலமின்றி(ப்)
பரமனடி சென்றுறங்கும்
எம் பதிக் குமரனுக்கு !
கோபுரமாய் நீ உயர்ந்து
கணப் பொழுது கடந்து
காலமது விரைந்து
ஈராண்டு நினைவலையில்
எம்மோடு உறவாடும் - எம்
இதய இளவரசே இங்கே
ஒரு கணம் எம்மை வந்து பாராயோ - என
ஏங்கிப் புலம்பினாலும்
பூச்சிய வாழ்வு தனில் - பூச்சியத்திற்குள்ளே
ஒரு இராச்சியத்தையாளும் எம்மிறைவன்
கழலடியை ஏகாதசியில் பெற்றவனே எம் குமரா
இறையோடு இரண்டறக் கலந்துறங்கும்
உன் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
பிரிவால் வாடும்
குடும்பத்தினர்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
நயினாதீவு - 3