நவாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிறிஸ்தோ அகுஸ்தீன் (சின்னமணி) நேற்று (10.03.2025) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் தவமணி அவர்களின் அன்புக் கணவரும், யூடிற்றா (நோர்வே), யூலியானா (லண்டன்), யுதாசன் (கனடா), யூஜினா ஆகியோரின் அன்புத் தந்தையும், புஸ்பராஜன், தவராஜன், தேவராஜன், ரோகினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற துரைராசா மற்றும் ராசமணி, ருக்குமணி, கமலா, அருளம்மா, செல்வராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெரோன், ஜெறிக்சன், யோனாஸ், மிறோன், மிறோனா, விறோனா, நியோமி, செருபா, எரிக்சன், ஸ்ரெபான், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கஆராதனை இன்று (11.03.2025) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 03.30 மணியளவில் நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி இடம்பெற்று பின்னர் சென்பீற்றஸ் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நவாலி கிழக்கு,
மானிப்பாய்.