சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா நமசிவாயம் அவர்கள் கடந்த 09.03.2025 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா - விசாலாட்சி தம்பதியின் பாசமிகு சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் (முன்னாள் புகையிரத நிலைய அதிபர்) - கனகம்மா தம்பதியின் அன்பு மருமகனும், வடிவாம்பிகை (கனடா - முன்னாள் மொழிபெயர்ப்பாளர் கல்வி அமைச்சு கொழும்பு) அவர்களின் அன்புக் கணவரும், அனுஜன், நிரந்தரி, Dr.அர்ஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும், Dr.அமண்டா அவர்களின் அன்பு மாமனாரும், அஜா வின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி (ஓய்வுநிலை ஆசிரியர்), புஷ்பராணி மற்றும் யோகமங்களம், பாக்கியலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியர்), இராதாமணி (ஓய்வுநிலை ஆசிரியர்), இரவீந்திரன் (முகாமையாளர் - Maruthi money Exchange (PVT)Ltd) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், அருணகிரிநாதன் (ஓய்வுநிலை ஆசிரியர்), தியாகராசா, காலஞ்சென்ற கணேசபிள்ளை (ஓய்வுநிலை பிரதம லிகிதர்) மற்றும் ஞானபண்டிதன் (ஓய்வுநிலை தொழில்நுட்ப உத்தியோகத்தர்), சிவநிதி, காலஞ்சென்றவர்களான சுந்தராம்பிகை, கமலாம்பிகை மற்றும் ஸ்ரீநிவாசன் (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற ஸ்ரீகிருஷ்ணராஜா (ஓய்வுநிலை போதனாசிரியர், தொழில்நுட்பக் கல்லூரி) மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா (பொறியியலாளர்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீவிசாகராஜா (ஓய்வுநிலை ஆசிரியர்), மாதவாம்பிகை மற்றும் Dr. ஸ்ரீஜெயராஜா, சாரதாம்பிகை (ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற யசோதராம்பிகை மற்றும் ஸ்ரீகணேசராஜா (ஓய்வுநிலை பொறுப்பதிகாரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் - வடமாகாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (14.03.2025) வெள்ளிக்கிழமை கனடாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
திருமதி. ஞா. இராதாமணி (சகோதரி)
077 981 4551