ஊரார்க்கு உழைத்து வழிகாட்டி வாழ்ந்தீர்கள்
புதல்வர்கள் வாழ்வில் புத்தொளியை விதைத்தீர்கள்
உங்கள் உழைப்பினால் எம்வாழ்வு வளமாக ஆனதப்பா
அன்பாய் யாவர்க்கும் அறிவுரைகள் சொன்னீர்கள்
கண்டிப்பின்றி கலகலப்பாய் பல கதைகள் பகர்ந்தீர்கள்
வேரோடி வாழ்ந்த பெருந்தருவைப் போல
ஊருக்கே அன்று நிழலாக வாழ்ந்தீர்கள்
நீங்கள் விண்ணேறி ஆண்டொன்று கடக்கிறது
ஆண்டு ஒன்றென்ன ஆயிரமே கடந்தாலும்
உங்கள் செயலனைத்தும் மங்காத பெருமை பேசும்
எங்கள் இதயங்களில் என்றும் உங்கள்
நினைவுகள் வாழும்.
அன்னாரின் முதலாம் ஆண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வுகள் இன்று (23.03.2025) ஞாயிற்றுக்கிழமை மதியம்; 12.00 மணியளவில் செல்வ மஹால் மண்டபத்தில் (இல. 1229, கே.கே.எஸ் வீதி, பூநாறி மரத்தடி, யாழ்ப்பாணம்) நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
குடும்பத்தினர்
077 691 3133
ஆனைக்கோட்டை,
யாழ்ப்பாணம்.