31 ஆம் நாள் வீட்டுக்கிருத்திய அழைப்பும்
நன்றி நவிலலும்
கடந்த 21.02.2025 வெள்ளிக்கிழமை சிவபதமடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் தம்பையா அழகரத்தினம் அன்னாரின் வீட்டுக்கிருத்தியை இன்று (23.03.2025) ஞாயிற்றுக் கிழமை “குபேரமஹால் மண்டபத்தில்” (சுதுமலை அம்மன் கோயில் அருகாமை) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளு மாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர் களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள் கின்றோம்.
குடும்பத்தினர்.
077 710 9476
சுதுமலை தெற்கு,
மானிப்பாய்.