யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும், இல.7/3, புனித பத்திரிசியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கபிரியேல்பிள்ளை சில்வெஸ்டர் கடந்த (29.03.2025) சனிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கபிரியேல்பிள்ளை - இராசம்மா தம்பதியரின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சைமன் சிங்கோ - அன்னம் தம்பதியரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சகாயமேரி (சரசு) யின் அன்புக் கணவரும், கலிஸ்ரா லோஜினி (லண்டன்), அனிற்றா கிஷாந்தி (சூட்டி - சுவிஸ்), ஜெனிற்றா தர்சினி (லண்டன்), லூட்ஸ் சர்மினி (ஆசிரியை - வேலணை மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஜெவ்றி (லண்டன்), நோபேட் (சுவிஸ்), றீகன் (லண்டன்), ஜொனி கியோமன் (முகாமைத்துவ உதவியாளர் - யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஷெரீனா, ஷெரோன், ஹட்றியன், றபாயல் ஆகியோரின் அன்புப் பேரனும், பேபி, இராசிங்கம், குமாரத்தி, ஜோர்ச், பெரியபுள்ளை (இத்தாலி), சின்னக்கிளி, சாரதா, புனிதம் (பிரான்ஸ்), சாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், செபமாலை, நாதன், ராதா, கிருஷ்ணபிள்ளை, றோபேட், ராணி, தாசன் (பிரான்ஸ்), நோணி (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சின்ராசா, கிறிஸ்ரி, பபி, அப்பன், இராசிங்கம், அந்தோனிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை இன்று (02.04.2025) புதன்கிழமை மாலை 03.00 மணிக்கு அசம்பளி ஒப் கோட் யாழ்ப்பாணம் திருச்சபையினரால் அன்னாரின் இல்லத்தில் நடத்தப்பட்டு, அவருடைய சரீரம் வசந்தபுரம் கெலன் தோட்டத்தில் அமைந்துள்ள அசம்பளி ஒப் கோட் திருச்சபையினரின் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
7/3, புனித பத்திரிசியார் வீதி,
யாழ்ப்பாணம்.