(முன்னைநாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை/ Oceanick Impex)
மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்;திகேசு யோகராஜா அவர்கள் நேற்று (11.04.2025) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு-நாகமுத்து தம்பதியின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு-சிவபாக்கியம் தம்பதியின் அன்பு மருமகனும் பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும், Dr.பத்மயோகனின் (தேசிய பல் வைத்தியசாலை, கொழும்பு) பாசமிகு தந்தையும் தர்ஷனாவின்; அன்பு மாமனாரும் சுவேஷனா, டிர்வின் ஆகியோரின் பாசமிகு பேரனும் காலஞ்சென்றவர்களான லோகசுந்தரம், தங்கபூரணம், சோமசுந்தரம், விஜயசுந்தரம், உருத்திரசுந்தரம், தியாகராஜா, சௌந்தரம் மற்றும் சோமசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற மங்களேஸ்வரியம்மா மற்றும் பத்மநாதன்(UK) அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக நாளை (13.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர் சாலையில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை முற்பகல் 11.00 மணியளவில் நடைபெற்று தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
46 1/1 I.B.C Road,
வெள்ளவத்தை.
011 255 9772
077 154 7116