மட்டுவில் தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், மில்வீதி, மீசாலை கிழக்கு, மீசாலையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பாப்பிள்ளை மயிலுப்பிள்ளை கடந்த (10.05.2023) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், புவனேஸ்வரியின் அன்புக் கணவரும், சுதாகரன் (கனடா), தேவதர்சன் (லண்டன்), மகிந்தன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும், விஜயமோகனச்செல்வி, சூரியப்பிரியா, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், சின்னத்துரை, நல்லம்மா, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஈஸ்வரதாஸ், லோகேஸ்வரி, கமலேஸ்வரி, மனோகரன், இரஞ்சிதன், ஸ்ரீதரன், பாஸ்கரன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், இலக்கியா, ஸ்ரேயன், டேனுஜன், ஆதிரா, மித்திரா (டர்னிகா), சித்திரா (ராகவி) ஆகியோரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, சண்முகம், யோகாநந்தன், யோகநாதன் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற செல்வராணி மற்றும் தவமணி, தேவகி, வத்சலா, ஸ்ரீவதனி, ஆனந்தராணி, பாலநந்தினி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (14.05.2023) ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.
021 227 0149
மில்வீதி, மீசாலை கிழக்கு,
மீசாலை.
001 (613) 889 - 8590
சுதாகரன்(Suthakaran)
0044 7415 441207
தேவதர்சன் (Thevatharsan)
0041 7674 92015
மகிந்தன் (Mahinthan)
இறுதிக்கிரியைகள் 14-05-2023 அன்று 11:00 AM மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இல் அமைந்துள்ள சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.