கைதடி வடக்கு கைதடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தவயோகநாயகி தனபாலசிங்கம் 30.05.2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - அன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா - சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், செந்தில்குமரன் (சுவிஸ்), செந்தில் வண்ணன் (லண்டன்), செந்தில்நிதி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் நளாயினி (சுவிஸ்), காலஞ்சென்ற மைதிலி (லண்டன்) மற்றும் கார்த்திகா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்மிலன், சந்தோஷி (சுவிஸ்), கம்சிகா, மதுரிகா, தேன்சிகா, நிகா, மகிழன், கருணி ஆகியோரின் அன்பு பேர்த்தியும், காலஞ்சென்ற சிவகுருநாதன் மற்றும் வசந்தகுணநாயகி, சிவயோகநாதன், சித்திராவாதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் பூபதிப்பிள்ளை, தர்மராசா, குமுதினி, ரவிக்குமாரன், காலஞ்சென்ற குமாரசாமி ஆகியோரின் அன்பு மைத்தினியும் தர்சா, தாரணி, தபோதரன், ரஜீவா, சுஜீவா, துவாரகன் ஆகியோரின் பெரிய தாயாரும் கபிலன், ருக்ஷன், திலீபன் ஆகியோரின் அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (01.06.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் ஆரம்பமாகி பூதவுடல் தகனக்கிரியைக்காக கைதடி வடக்கு தச்சன்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
கைதடி வடக்கு,
கைதடி