அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ‘தயாம்மா’ என்று அன்பாக அழைக்கப்பட்ட திருமதி புலோமிசை அருளம்பலம் அவர்கள் 18 ஆம் திகதி சனிக்கிழமை சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - செல்லம்மா தம்பதியினரின் மகளும் காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் - தங்கம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற அருளம்பலம் (MLT) அவர்களின் பாசமிகு துணைவியாரும், காலஞ்சென்ற பரமேஸ்வரி மற்றும் பரஞ்சோதியின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான ரோகிணியம்மா, தனபாலரட்ணம் (அன்பு வைத்தியர்), இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் தணிகை (U.K) அம்பிகை (Canada), காலஞ்சென்ற சபேசன் மற்றும் வனிதை (U.K) இராதை (உடற்கல்வி அலகு, யாழ். பல்கலைக்கழகம்) விக்னேசன் (U.K) ஆகியோரின் பாசமிகு தாயாரும், போதரட்ணம் (U.K), கருணாகரன் (U.K), அபிராமி (U.K) ஆகியோரின் மாமியாரும், அரூபன், பாரீசன், பிறையவன், தர்சன், கீர்த்தனா, கனிக்கா, ஹாசினி, ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இன்று 21 ஆம் திகதி செவ்வாய்கிழமை, இல. 458, கண்டி வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப. 3 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
தகவல் : குடும்பத்தினர்
இராதை அருளம்பலம் (மகள்) - 077 791 7731