(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்)
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரன் அவர்கள் கடந்த (20.10.2025) திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் - ஜெயமணி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், மனோகராதேவியின் அன்புக் கணவரும், சாந்தினி (பிரான்ஸ்), சத்தியன் (ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ்), ரமணன் (ஸ்ரீலங்கா ரெலிகொம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தயாளன் (பிரான்ஸ்), பூமணி (ஆசிரியை யாழ்/ இந்து மகளிர் கல்லூரி), அனித்தா (ஆசிரியை, கொழும்பு பாத்திமா மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மகேந்திரன், குலேந்திரன், குணேஸ்வரி, விஜேந்திரன் மற்றும் இராஜேஸ்வரி (கொழும்பு), நேசேந்திரன் (ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறந்த சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், சுந்தரலிங்கம், கணேசலிங்கம், செல்வலக்ஷ்மி, யோகலக்ஷ்மி ஆகியோரின் மைத்துனரும், லக்ஷ்மன், பிரணவி, பிரகாஷன், கேஷாயினி, கேஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (26.10.2025) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 09:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.30 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
077 386 3753, 071 855 5105
“அன்னை இல்லம்”
G.P.S வீதி,
கல்வியங்காடு.