யாழ்ப்பாணம் புத்தூர், வாதரவத்தையை பிறப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. குமாரசுவாமி இரத்தினம் அவர்கள் 03.11.2025 திங்கட்கிழமை அன்று ஓமந்தையில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஐயாக்குட்டி - பொன்னம்மா தம்பதியரின் அன்பு புதல்வியும், ஆறுமுகம் - மாணிக்கம் தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற குமாரசுவாமியின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி, செல்லம்மா, ஆச்சிமுத்து, தங்கச்சிப்பிள்ளை மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கணேசதாசன், நகுலேஸ்வரி, ஆறுமுகதாசன், பசுபதிதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நிர்மலாதேவி, கணேசநாதன், தபோதினி, விரதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், கஜாபிரணவி, டிலக்ஷன், சஜித், தக்ஷகி, தஜனி, அபிஷன், துவிஜன், விஷாகன், ஹரிஜன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், ஷக்திதரனின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (06.11.2025) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு ஓமந்தையில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்பு தகனத்திற்காக பூந்தோட்டம் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் : குடும்பத்தினர்
077 3740 450
அரச வீட்டுத்திட்டம்
வேப்பங்குளம்,
ஓமந்தை.