கந்தையா சதானந்தன் (வவா)
பிறப்பு
14-01-1957
இறப்பு
02-11-2023
இணுவில் மேற்கு, வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, மஞ்சத்தடியை வசிப்பிடமாக வும் கொண்ட கந்தையா சதானந்தன் அவர்கள் நேற்றுமுன்தினம் (02-11-2023) வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (ஓய்வுபெற்ற ஆசிரியர்) கனகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வனும், காலஞ்சென்ற பத்மாவதியின் அருமைப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான சோதிப்பெருமாள் (துP, ஓய்வுபெற்ற அதிபர்) சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், மீனலோசனியின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கருணானந்தன் மற்றும் ஆனந்தபாஸ்கரன் (ஆனந்தன், கனடா), ஆனந்தகேதீஸ்வரன் (ஈசன்), வித்தியானந்தநங்கை (சுவிஸ்), சத்தியானந்தநங்கை (பிரான்ஸ்), சத்தியானந்தன் (அப்பன்) ஆகியோரின் அருமைச் சகோதரனும், யாழினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிரதேச வைத்தியசாலை அடம்பன்), சர்மினி (யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும,; இராகுலனின் (அபிவிருத்தி உத்தியோகத்தர் - வலயக்கல்வி அலுவலகம் மடு) அன்பு மாமனாரும், விரோஷின், ஷாருசி ஆகியோரின் தாத்தாப்பாவும், யோகேந்திரன் (சுவிஸ்), ஜெயக்குமாரன் (பிரான்ஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா (லண்டன்), சந்திரலோசனி, விக்கினேஸ்வரி, பாமினி (கனடா), சிவனேஸ்வரி (ஓய்வுபெற்ற போதனாசிரியர்), சகுந்தலாதேவி ஆகியோரின் மைத்துனரும் சுகந்தமலர் (லண்டன்), தபானந்தன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் சகலனும், சோதிலிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) தம்பதிகளின் சம்பந்தியும், சசிகரன் - ஜீத்தா, றஜீவ்கரன் - திவானா, தனுஷியா - ஹரி ஹஜன் ஆகியோரின் சித்தப்பாவும். சுகாசினி, ரூசிகா - சுரேஸ், துளசிகா - சிவசஜிதரன் ஆகியோரின் பெரிய தந்தையும், இந்துஜா - சுமன், சோபிதா - அஜந்தன், ஜெனித்தா - நிஷாந், சரபன், சரசவி, சாரகி ஆகியோரின் மாமனும் புயல், முகில், றக்ஷா, தீரன், ஹருணியா, ஹர்ஷியா, ஹரிசுபன், இஷ்ணு, அர்ச்சுனா, ஜெஜெஸ்னா, தியானா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (05.11.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைக்காக முற்பகல் 10.30 மணிக்கு காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்
“சரஸ்வதி மஹால்”,
மஞ்சத்தடி தெற்கு, இணுவில்.
இறுதிக்கிரியைகள் 05-11-2023 அன்று 10:30 AM மணியளவில் சரஸ்வதி மஹால்”,
மஞ்சத்தடி தெற்கு, இணுவில். இல் அமைந்துள்ள காரைக்கால் இந்து மயானத்திற்கு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.