கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும் 4 ஆம் வட்டாரம் வேலணையை வாழ்விடமாகவும் தற்போது இந்தியா சென்னையில் வசித்து வந்தவருமான திருமதி விமலேந்திரன் இராஜேஸ்வரி கடந்த 05.10.2024 சனிக்கிழமை காலமானார்.
அன்னார் வேலணை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் விமலேந்திரன் (விமல் கூல்பார்- வங்களாவடிச் சந்தி) அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணன் - மனோன்மணி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம் - பகவதி தம்பதியரின் அன்பு மருமகளும், சந்துரு ( B.H.M - U.K) , கௌதம்( B.E India) , சௌபா ( M.E Aerospace - Canada), ராஷ்மி ( M.E Aeronautical - Canada) ஆகியோரின் ஆருயிர் அன்னையும், துஷா (B.S.E - U.K ), ஜெய்வாஹினி ( M.E - Canada), பானுலதா (Aeronautical - Canada ), மன்ஜித் ( Aeronautical - Canada) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், அகஸ்தியாவின் அன்பு அப்பம்மாவும், பரமேஸ்வரி, ராஜலட்சுமி, விஜயகுமாரி, பிரேமகுமாரி, ராஜ்குமார், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன், சுரேஷ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலேந்திரன், குலேந்திரன், கணேஸ்வரி, காலஞ்;சென்றவர்களான நாகேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (13.10.2024) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் வேலணையில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
076 922 0139
4 ஆம் வட்டாரம்,
வேலணை.
இறுதிக்கிரியைகள் 13-10-2024 அன்று 10:00 AM மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.