செய்திகள் வணிகம்

கொடுப்பனவுத் தீர்வு வழங்கிய கொமர்ஷல் வங்கி

கொழும்பின் முதலாவது சர்வதேச தரம் வாய்ந்ததும் மிகவும் கீர்த்திமிக்க சில்லறை வர்த்தக நிலையங்களைக் கொண்டதுமான வன் கோல்பேஸ் மோல் இலங்கையின் முதலாவது அன்ட்ரோயிட் அடிப்படையிலான கொடுப்பனவு வசதி தீர்வினையும் தற்போது பெற்றுள்ளது. கொமர்ஷல் வங்கியின் சக்தியோடு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பல்துறை செயற்பாடு கொண்ட ஸ்மார்ட் தளத்தின் மூலம் வர்த்தகர்கள் தரமான டெபிட் மற்றும் கிரடிட் கார்ட் அடிப்படையிலான கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். சீன பொருள் கொள்வனவாளர்கள் மத்தியில் பிரபலமான டெப் அன்ட் கோ கொடுப்பனவு மற்றும் ஞசு கோர்ட் கொடுப்பனவுகள் என்பன இதில் அடங்கும்.

இந்தப் பங்குடைமை பற்றிக் கருத்து வெளியிட்ட வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவு பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க அபிவிருத்தியை தொடர்ந்து நாடும் ஒரு வங்கி என்ற வகையிலும் பாதுகாப்பையும் வசதியையும் வழங்கக் கூடிய புதிய தொழில்நுட்பங்களை எப்போதும் நாடி நிற்கும் ஒரு வங்கி என்ற வகையிலும் இலங்கையில் உள்ள மிகப் பெரிய சர்வதேச பல்தொகுதி வர்த்தக நிலையத்தோடு பங்குடைமையில் இணைவதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். வன் கோல்பேஸ் மோலுடனான இந்தப் பங்குடைமை கொமர்ஷல் வங்கியின் நம்பகத்தன்மை மற்றும் ஆக்கபூர்வ இயல்பு என்பனவற்றுக்கான சான்றாகும். கடந்த ஆண்டில் கட்டி எழுப்பப்பட்ட நம்பிக்கைகளை அது மீள வலியுறுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று கூறினார்.

காலிமுகத் திடலில் அமைந்துள்ள ஏழு மாடிகளைக் கொண்ட வன் கோல்பேஸ் மோல் எல்லோருக்கும் ஏதோ ஒன்றை வழங்கக் கூடிய வித்தியாசமான பல அம்சங்களைக் கொண்ட ஒரு இடமாகும். உள்ளுர் உற்பத்திகள் முதல் சர்வதேச புகழ்மிக்க உற்பத்திகள் என்பனவற்றதை; தாராளமாகக் கொண்டுள்ள இந்தப் பொருள் கொள்வனவு கட்டிடத் தொகுதியானது மொட்டை மாடியில் திறந்த வெளி உணவகத்தையும் கொண்டுள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளன. உள்ளக விளையாட்டரங்கு மற்றும் 250 சில்லறை விற்பனை நிலையங்கள் என்பனவற்றுடன் 490000 சதுர அடி பரப்பில் இது அமைந்துள்ளது.

சிலிஸ் அன்ட் அமெரிக்கன் பிரபல உணவகத் தொடர் நிலையங்கள், அதேபோல் துபாயின் பிரபல விளையாட்டுப் பொருள் உற்பத்திகளின் பிரதிநிதிகள் நிறுவனம், உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட ஆடை வகைகள், அதி நவீன வசதிகள் கொண்ட ஒன்பது திரை அரங்குகள், சிறுவர்களுக்கென்றே பிரத்தியேகமான ஒரு திரை அரங்கு என இன்னோரன்ன பல அதி நவீன வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது.

தொடர்ந்து ஒன்பது வருடங்களாக உலகின் தலைசிறந்த ஆயிரம் வங்கிகள் வரிசையில் இடம் பெற்றுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி நாடு முழுவதும் 267 கிளைகளுடனும், 856 ATM வலையமைப்புக்களுடனும் செயற்படுகின்றது. 2018ல் மட்டும் 40க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் கொமர்ஷல் வங்கி பெற்றுள்ளது. இவ்வாண்டு இதுவரை 25க்கு மேற்பட்ட விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி 2019ம் ஆண்டில் இலங்கை மக்களின் பாராட்டை வென்றுள்ள மிகச் சிறந்த பத்து நிறுவனங்களில் ஒன்றாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் பங்களாதேஷில் 19 கிளைகளைக் கொண்டதாகவும், மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.

Related posts

இஸபெல் டொஸ் சன்டோஸின் ஆவணங்கள் வௌியாகின

Tharani

கூட்டணி தலைவராக சஜித்? மனாே

Tharani

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்

கதிர்