செய்திகள் பிராதான செய்தி

வடக்கிலும் சுகததாச போன்ற விளையாட்டு அரங்கு வேண்டும் – ஆனந்தன்

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கு போன்று வடக்கில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் விளையாட்டரங்கு அமைக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனூடாக தேசிய மட்டப் போட்டிகளில் தமிழ் மாணவர்கள் கலந்துகொள்வதற்கு இது உதவியாக இருக்கும் எனவும் அதில் பங்கேற்க அவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்று (07) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத்துறை ஒழுங்குவிதிகள் தொடர்பான சட்டமூல திருத்த விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும்,

வவுனியா மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இடை நிறுத்தப்பட்டுள்ள விளையாட்டு வீரர்களுக்கான ‘கிரீடா சக்தி’ நிதியுதவித் திட்டத்தை உடனடியாக மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஓமந்தையில் அமைக்கப்பட்டு வந்த விளையாட்டு அரங்கு பணிகள் நிதியில்லாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளளது. கிளிநொச்சி, மன்னாரிலும் நான்கு விளையாட்டரங்குகள் இதே நிலையில் இருப்பதாகவும் தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், இவற்றுக்கான நிதிகள் உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Related posts

பயங்கரவாத தாக்குதலை ஆதரித்த மௌலவிக்கு பிணை

G. Pragas

ராஜித சாதாரண அறைக்கு மாற்றம்

கதிர்

கலாசார விழுமியங்களை கலை, இலக்கிய நிகழ்வுகள்தான் வளர்க்கின்றன

Tharani

Leave a Comment