சினிமா

ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சூரி

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இணைந்துள்ளார்.

பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் 25ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த சூரி,

சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லாத நடிகரைப் பார்க்க முடியாது. ஒரு ரசிகனாக அவரது படங்களைப் பார்த்து அசந்து போய் இருக்கிறேன். ரஜினி சேருடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை, அது நடக்குமா? நடக்காதா? என்று நான் பல வருடங்களாக ஏங்கி இருக்கிறேன்.

நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் என்று உணர்கிறேன், வீட்டில் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள் – என்றார்.

Related posts

பிரமாண்ட படமாகிறது “அவனே ஸ்ரீமன் நாராயணா”

reka sivalingam

சூர்யாவும் வெற்றிமாறனும் இணையும் “வாடிவாசல்”

Bavan

யோகிபாபுடன் யாஷிகா

G. Pragas