முல்லைத்தீவில் உடைப்பெடுத்த குளங்கள் பெருகும் வெள்ளத்தால் மக்கள் அவலம்

14

 

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் கடந்த இரண்டு நாள்­க­ளாக பெய்­து­வந்த கடும் மழை கார­ண­மாக நித்­தகை குளம் உள்­ளிட்ட 6 குளங்­கள் உடைப்­பெ­டுத்­துள்­ள­தாக இடா் முகா­மைத்­துவ உத­விப்­ப­ணிப்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 202 குடும்­பங்­களைச் சேர்ந்த 647 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கரை­து­றைப்­பற்­றில் ஆறு குடும்­பங் ­களை சேர்ந்த 26 பேரும்,ஒட்­டு­சுட்­டான் பிர­தே­சத்­தில் 179 குடும்­பங்­களைச் சேர்ந்த 566 பேரும், துணுக்­காய் பிர­தே­சத்­தில் 15 குடும்­பங்­களை சேர்ந்த 48 பேரும்,வெலி­ஓ­யா­வில் 2 குடும்­பங்­களை சேர்ந்த 7 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட செய­லக இடா் முகா­மைத்­துவ உத­விப்­ப­ணிப்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.

இதே­வேளை மாவட்­டத்­தில் பல சிறு ­கு­ளங்­கள் நீர் நிரம்­பி­யுள்­ள­து­டன் நித்­தகை குளம் உள்­ளிட்ட 6 குளங்­கள் உடைப்­பெ­டுத்­துள்­ளன.

முல்­லைத்­தீ­வு­மா­வட்­டத்­தில் இடரிலிருந்து மக்­க­ளைப் பாது­காப்­ப­தற்­காக 64 ஆவது படைப்­பி­ரிவு இணைக்­கப்­பட்­டுள்­ள­து­டன், முப்­ப­டை­யி­ன­ரும் இணைந்து மக்­களை காக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக இடா் முகா­மைத்­துவ உத­விப்­ப­ணி­பப்­பா­ளர் தெரி­வித்­துள்­ளார்.அதே­வேளை மாவட்­டத்­தில் ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­லர் பிரி­வுக்­குட்­பட்ட 5 கிராம அலு­வலர் பிரி­வு­க­ளில் மக்­க­ளு­டைய வீடு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­துள்­ளது. பண்­டா­ர­வன்­னி­யன் கிராம அலு­வலர் பிரி­வுக்­குட்­பட்ட 50 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 172 பேரும், பேராறு கிராம அலு­வலர் பிரி­வில் 4 குடும்­பங்­க­ ளைச் சேர்ந்த 17 பேரும், புளி­யங்­கு­ளம் கிராம அலு­வலர் பிரி­வில் 4 குடும்­பங்­க ­ளைச் சேர்ந்த 14 பேரும், இந்­து­பு­ரம் கிராம அலு­வலர் பிரி­வில் 9 குடும்­பங்­க­ ளைச் சேர்ந்த 32 அங்­கத்­த­வர்­க­ளும், அம்­ப­கா­மம் கிராம அலு­வலர் பிரி­வில் 5 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 21 அங்­கத்­த­வர்­க­ளு­மாக 72 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 251 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று ஒட்­டு­சுட்­டான் பிர­தேச இடர்­மு­கா­மைத்­து­வப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.

மக்­கள் இடம்­பெ­ய­ரும் நிலை­யும் ஏற்­ப­டும். அப்­படி இடம்­பெ­ய­ரும் மக்­கள் பொது மண்­ட­பங்­கள் அல்­லது பாட­சா­லை­க­ளில் தங்­க­வைக்­கப்­ப­டு­வார்­கள். அவர்­க­ளுக்­குத் தேவை­யான உண­வு­கள் வழங்­கப்­ப­டும் என்­றும் இடர் ­மு­கா­மைத்­து­வப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர். துணுக்­கா­யில் உள்ள கோட்­டை­கட்­டிய குளம், தென்­னி­யங்­கு­ளம், மரு ­தங்­கு­ளம், தேறாங்­கண்­டல்­கு­ளம், கோட்­டா­ளங்­கு­ளம், ஐயன்­கு­ளம் என்­ப­வற்­றில் இருந்து கலிங்கு பாய்­கி­றது. இதில் கோட்டை கட்­டி­ய­கு­ளம் சிறி­தாக உடைப்­பெ­டுத்து தற்­போது சரி­செய்­யப்­பட்­டுள்­ளது, கோட்­டா­ளங்­கு­ளம் நேற்று முன்­தி­னம் இரவு உடை­பெ­டுத்து குடி­யி­ருப்­புக்­குள் வெள்­ளம் புகுந்­தது எனி­னும் அந்­தக் குள­மும் தற்­போது சீர்­செய்­யப்­பட்­டுள்­ளது. பெரிய பாதிப்­புக்­கள் இடம்­பெ­ற­வில்லை, எனி­னும் மழை தொடர்ந்­தால் மக்­கள் இடம் பெயர்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் உள்­ளன என்று துணுக்­காய்ப் பிர­தேச செய­லர் தெரி­வித்­தார்.

You might also like