வெற்றிகளில் சதமடித்தார் ‘கப்டன் கூல்’

சென்னை சுப்­பர் கிங்ஸ் அணி­யின் தலை­வர் டோனி, சென்னை அணிக்­காக இது­வரை 100 ஆட்­டங்களில் வெற்­றி­யைத் தேடிக் கொடுத்­துள்­ளார்.

நடப்பு வருட ஐ.பி.எல். தொட­ரில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சென்னை சுப்­பர் கிங்ஸ் அணி ஹைத­ரா­பாத்தை வீழ்த்தி ‘பிளே ஆப்’ சுற்­றுக்­குள் சென்­றது.

இந்த ஆட்­டம் இரண்டு கோணங்­க­ளில் அந்த அணிக்கு மிக­வும் முக்­கி­யத்­து­வம் மிக்­க­தாக அமைந்­தது. ஒன்று, சென்னை அணி இது­வரை விளை­யா­டிய அனைத்து சீச­னி­லும் ‘பிளே ஆப்’ சுற்­றுக்­குச் சென்ற அணி என்ற பெய­ரெ­டுக்க கடந்த ஆட்­டம் உத­வி­யது.

மற்­றொன்று சென்னை அணி­யின் தலை­வர் டோனிக்கு இது 100ஆவது வெற்­றி­யாக அமைந்­தது.

டோனி­யின் தலை­மை­யில் சென்னை அணி ஐ.பி.எல். தொடர்­க­ளில் 86 வெற்­றி­க­ளை­யும், சம்­பி­யன்ஸ் லீக் தொடர்­க­ளில் 14 வெற்­றி­க­ளை­யும் குவித்­துள்­ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close