இளம்பெண்ணும், குடும்பஸ்தரும் யாழில் தீக்குப் பலியான சோகம்!!

குடாநாட்டில் இருவேறு தீ விபத்துச் சம்பவங்களில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்கப்பட்ட பெண் உட்பட இருவர் கிசிச்சைகள் பயனின்றி உயிரிழந்துள்ளனர்.

நெருப்புத் தணல் உள்ளது என்று தெரியாது அடுப்பில் விறகு வைத்து மண்ணெண்ணை ஊற்றியபோது தீப்பற்றி எரிந்ததில் காயமடைந்து பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 8ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். அவர் 6 நாள்களின் பின் நேற்றுமுன்தினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த சீலன் அஸ்வினி (வயது- 21) எனும் யுவதியே உயிரிழந்தார்.

எரிவாயு மணக்கிறது என்று வீட்டின் உள்ளே சென்றனர் எரிவாயுவின் வயரைக் கழற்றிவிட்டு சிலிண்டரைக் குறைப்பதாக நினைத்து அதிகரித்தால் தீ பற்றி எரிந்து குடும்பத் தலைவர் ஒருவர் காயமடைந்தார். அவர் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையில் கடந்த 10ஆம் திகதி சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சைகள் பயனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

கல்வியங்காட்டைச் சேர்ந்த பூபதி பிரதபன் (வயது-37) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். இருவரினதும் இறப்புத் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந. பிரேமகுமர் மேற்கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close