குரு­ந­கர் பாடும்­மீன் கழ­கம் இறு­திக்­குச் சென்­றது!!

இலங்கை கால்­பந்­தாட்­டச் சம்­மே­ள­னம் நடத்­தும் இரண்­டாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் குரு­ந­கர் பாடும்­மீன் அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

அனு­ரா­த­பு­ரம் மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் அணியை எதிர்த்து மட்­டக்­க­ளப்பு யங்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முதல் பாதி­யின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பெற்­றி­ருந்­தன. இரண்­டா­வது பாதி­யில் இரண்டு அணி­க­ளும் மிகச் சிறந்த போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. இரண்­டா­வது பாதி­யில் கோலெ­து­வும் பதி­வா­க­வில்லை.

நிர்­ண­யிக்­கப்­பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா ஒரு கோலைப் பதி­வு­செய்­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வைத்து 3:1 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்­றது குரு­ந­கர் பாடும்­மீன் அணி.

You might also like