side Add

சீனக் குடா வானூர்­தி தளத்­தி­லி­ருந்து- அனு­ம­தி­பெ­றாது பறந்­து­ சென்ற வானூர்தி!!

இலங்­கைக்கு பன்­னாட்டு முத­லீட்­டா­ ளர்­கள் சிலரை ஏற்­றி­வந்த தனி­யார் ஜெட் வானூர்தி திரு­கோ­ண­ மலை, சீனக்­குடா வானூர்­தித் தளத்­தி­லி­ருந்து, அனு­ம­தி­யின்­றிப் புறப்­பட்­டுச் சென்­ற­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.
சீனா , சிங்­கப்­பூர் ,ஹொங்­கொங் நாடு­க­ளைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர்­கள் சிலர், தனி வானூர்தி ஒன்­றில் கடந்த 3 ஆம் நாள், இலங்­கைக்கு வந்­தி­ருந்­த­னர்.

கட்­டு­நா­யக்க வானூர்தி நிலை­யத்­தில் வந்­தி­றங்­கிய இந்த வானூர்தி, பின்­னர் பாது­காப்பு அமைச்­சின் அனு­ம­தி­யு­டன் திரு­கோ­ண­மலை, சீனக்­குடா வானூர்­தித் தளத்­தில் தரை­யி­றக்­கப்­பட்­டது.

திரு­கோ­ண­ம­லை­யில் முத­லீ­டு­கள் தொடர்­பாக ஆராய்ந்த பின்­னர், பன்­னாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளின் குழு சீனக்­குடா வானூர்­திப் படைத் தளத்­தி­லி­ருந்து, சிங்­கப்­பூ­ருக்­குப் புறப்­பட்­டுச் சென்­றது.

இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர், சீனக்­குடா வானூர்தி நிலை­யத்­திலி­ ருந்து, சிங்­கப்­பூ­ருக்­குப் பய­ண­மான முதல் வானூர்தி இது.

அதே­வேளை, அனைத்­து­லக வானூர்­திப் போக்­கு­வ­ரத்­துக்கு அனு­மதி அளிக்­கப்­ப­டாத வானூர்தி நிலை­யம் ஒன்­றில் இருந்து, இந்த வானூர்தி புறப்­பட்­டுச் சென்­றமை குறித்­துச் சர்ச்சை எழுந்­துள்­ளது.

நாட்­டின் குடி­வ­ரவு, குடி­ய­கல்­வுச் சட்­டம் மற்­றும் சிவில் வானூர்தி சேவை­கள் சட்­டம் ஆகி­ய­வற்­றின்­படி, பன்­னாட்டு விமா­னம், அனு­மதி பெறாத விமான நிலை­யம் ஒன்­றி­லி­ருந்து, நாட்டை விட்­டுப் புறப்­பட்­டுச் செல்ல முடி­யாது.
அதே­வேளை, குடி­வ­ரவு, குடி­ய­கல் வுத் திணைக்­க­ளத்­தால் நாட்­டி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக, கப்­பல்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் அனு­ம­தி­யைப் பயன்­ப­டுத்­தியே இந்த வானூர்தி புறப்­பட்­டுச் சென்­ற­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

You might also like