ரஷ்யா மீதான தடை நீக்­கம்!

ரஷ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணை­யம் மீது விதிக்­கப்­ப ட்­டி­ருந்த தடையை பன்­னாட்டு அமைப்­பான ‘வாடா’ நீக்­கி­யது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடை­பெற்ற பன்­னாட்­டுத் தொடர்­க­ளில் ரஷ்ய தட­கள வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை­கள் ஊக்க மருந்­தைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். அவர்­களை இந்த விவ­கா­ரத்­தில் சிக்­கா­மல் காப்­பாற்­று­வ­தற்­காக அந்த நாட்டு ஊக்­க­ம­ருந்து தடுப்பு ஆணை­யம் விளை­யாட்டு அமைச்­ச­கத்­தின் உத­வி­யு­டன் பல்­வேறு வழி­மு­றை­களை கையாண்­ட­தாக முறைப்­பா­டு­கள் குவிந்­தன.

விசா­ர­ணை­க­ளின் ­போது ரஷ்­யத் தரப்­பி­ன­ரின் குற்­றம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இதை­ய­டுத்து ரஷ்­யத் தட­கள அணிக்க பன்­னாட்டு ஊக்­க­ம­ருத்து தடுப்பு அமைச்­ச­கத்­தால் தடை விதிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து கடந்த மூன்று ஆண்­டு­க­ளாக ரஷ்ய வீரர்­கள் பன்­னாட்­டுத் தட­க­ளத் தொட­ரில் கலந்­து­கொள்­ள­வில்லை. இந்த நிலை­யில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற ‘வாடா’ செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் ரஷ்ய ஊக்க மருந்து ஆணை­யம் மீதான தடையை நீக்­கு­வது என்று முடிவு செய்­யப்­பட்­டது. வாடா­வின் இந்த முடிவை ரஷ்ய அரசு வர­வேற்­றது.

You might also like