அனு­ப­வ­மற்ற பந்­து­வீச்சு என்ற ரோகித் சர்மா!!

இந்­திய அணிக்கு ஹொங்­கொங் தோல்வி பயம்­காட்­டிய விவ­கா­ரத்­துக்­குக் கார­ணம், ‘இந்­திய அணி­யின் பந்­து­வீச்சு அனு­பவ முதிர்ச்சி அற்­ற­தா­லேயே’ என்று தெரி­வித்­தார் இந்­திய அணி­யின் தலை­வர் ரோகித் சர்மா.

ஆட்­டத்­தின் பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் ரோகித்.

‘ஆட்­டத்தை வெல்­வது முக்­கி­யம். அதை நிகழ்த்தி விட்­டோம். நிச்­ச­யம் எளி­தல்ல என்­பதை அறிந்­தி­ருந்­தோம். எம்­மி­டம் இருப்­பது அனு­ப­வ­மற்ற பந்து வீச்சு வரிசை.

ஆனால் அது ஒரு சாக்­கல்ல. இன்­னும் கொஞ்­சம் அடித்து ஆடி­யி­ருக்க வேண்­டும், அது­தான் நாம் செய்த தவறு. இது கற்­றுக் கொள்­ளும் இடம். ஆனால் ஆட்­டத்­தின் எந்த நிலை­யி­லும் எங்­கள் மீது சந்­தே­கம் ஏற்­ப­ட­வில்லை. ஆனால் ஹொங்­கொங் அணி­யைப் பாராட்­டு­கி­றேன். ஆரம்ப வீரர்­கள் சிறப்­பாக விளை­யா­டி­னார்­கள்’ என்று ரோகித் மேலும் தெரி­வித்­தார்.

You might also like