இரண்டு தமிழ் குடும்பங்களுக்கு- இராணுவத்தால் வீடு!!

வன்னி பாதுகாப்பு படை தலைமையகத்தால், இரண்டு தமிழ் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரெராவின் வழிகாட்டலில் , குருநாகலைச் சேர்ந்த சந்தன அழககோன் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஆகியோரின் நிதி உதவியுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

வவுனியா கணேசபுரம் பகுதியில் வசிக்கும் நிவர்சனா மற்றும் பம்பைமடு பகுதியில் வசிக்கும் மூர்த்தி ஆகியோருக்கே குறித்த வீடுகள் கையளிக்கபட்டுள்ளன.

அத்துடன் வீட்டுக்குத் தேவையான நாற்காலிகள், மேசைகள், சமையல் உபகரணங்கள், என்பனவும் வழங்கப்பட்டுள்ளன.

You might also like