வீடுகள் மீது தாக்குதல்- இருவர் கைது!!

வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு பேர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஆனைக்கோட்டை பிடாரி அம்மன் கோவிலடியில் உள்ள வீடொன்றிலிருந்து இலக்கத்தகடுகளற்ற மோட்டார் சைக்கிள், கைக் கோடரி மற்றும் வாள் என்பன மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியிலுள்ள இரண்டு வீடுகள் உள்பட மூன்று வீடுகளுக்குள் புகுந்த 9 பேர் கொண்ட குழு அடாவடியில் ஈடுபட்டிருந்தது.

சம்பவம் இடம்பெற்று சில மணி நேரங்களில் கொக்குவில் பகுதியில் வைத்து இளைஞர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

You might also like