வீட்டுத் திட்ட்டத் தெரிவில் அரசியல் தலையீடு- நகரச சபைத் தலைவர் குற்றஞ்சாட்டு!!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தின் பின்னனியில் அரசியல் உள்ளது என்று மன்னார் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இங்கு அதிகலவான வீட்டுத்திட்டங்கள் அரசியல் வாதிகளின் ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றது. என்னிடம் பலர் நேரடியாக வந்து முறையிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட, தேவையுடையவர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை.அவர்கள் தொடர்ந்தும் புறக்கனிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like