அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை- இன்று வாக்கெடுப்பு!!

அர­சுக்கு எதி­ராக மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யால் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மீது நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று ஆரம்­ப­மான விவா­தம் இன்று மாலை வரை தொட­ரும்.

உயிர்த்த ஞாயிறு தின­மன்று மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளுக்­குப் பொறுப்­பேற்று தலைமை அமைச்­சர், அமைச்­ச­ரவை உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அர­சும் பதவி விலக வேண்­டும் எனக் கோரி சபை­யில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இந்த நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை மீதான விவா­தத்­தை­ய­டுத்து இன்று மாலை 6.30 மணி­ய­ள­வில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு பொது எதி­ரணி ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதே­வேளை, பெரும்­பான்­மைப் பலத்­தைக் கொண்­டி­ராத அரசு கவி­ழுமா அல்­லது காப்­பாற்­றப்­ப­டுமா என்­பது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் கைக­ளி­லேயே இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழுக் கூட்­டம் இன்று காலை 10 மணிக்கு இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

இதன்­போதே அர­சுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை ஆத­ரிப்­பதா? எதிர்ப்­பதா? அல்­லது நடு­நிலை வகிப்­பதா? என்­பது தொடர்­பில் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுக்­க­வுள்­ளது.

You might also like